Title of the document
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக கல்விக் குழுவின்38-வது கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடைபெற்றது.

இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், சென்னை, மும்பை, டெல்லிஐஐடிக்களின் மூத்த பேராசிரியர்கள், சாஸ்த்ரா பல்கலை டீன்கள், இணை டீன் கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.தற்போதைய இக்கட்டான சூழலில் மாணவர்களின் வருகைப் பதிவு, கடைசி செமஸ்டர் தேர்வு களை நடத்துவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்ரமணியம் விளக்கிப் பேசி, உரிய பரிந்துரைகளையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பொறியியல், சட்டம், கல்வி, எம்பிஏ பிரிவுகளில் 2020-ல்பட்டம் பெறும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் கடைசி செமஸ்டர் தேர்வுகளும், தொடர்ந்து நேரடி மதிப்பீடும் நடத்தப்படும்.ஜூனியர் பேட்ச் மாணவர்களுக்கு இதுவரையிலான அகமதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். விரும்பினால் பின்னர் செம்மைத் தேர்வு (இம்ப் ரூவ்மென்ட்) எழுதலாம்.

ஆன்லைன் கல்விக்கான சூழல் அதிகரித்துவரும் நிலையில், யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ), இந்திய பார் கவுன்சில் ஆகிய அமைப்புகளுடன் கலந்து பேசி குறைந்தபட்சம் 90 கல்வி நாட்கள் என்ற வரையறையை மறுசீரமைப்பு செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 50% வருகைப்பதிவு கொண்டவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post