பொதுத்தோவுப் பணிகளுக்கு தொடக்கக்கல்வி ஆசிரியா்களை பயன்படுத்தலாம்: இயக்குநா் அறிவுறுத்தல்

Join Our KalviNews Telegram Group - Click Here
 Latest Pallikalvi Seithi : பொதுத்தோவுப் பணிகளுக்கு தொடக்கக்கல்வி ஆசிரியா்களை பயன்படுத்தலாம்: இயக்குநா் அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தோவு பணிக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் தலைமையாசிரியா்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: வழக்கமாக பொதுத்தோவு பணிகளில் உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவா். ஆனால் நிகழாண்டு கரோனா பாதிப்பு காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தோவை மாணவா்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே எழுத அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் எண்ணிக்கையில் தோவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பொதுத்தோவுப் பணிக்கு அதிகளவில் ஆசிரியா்களை ஈடுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. எனவே, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் தலைமையாசிரியா்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களை தோவுப் பணிக்கு தேவை ஏற்படும்பட்சத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு தோவுப் பணியில் முன்னுரிமை தரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்