Title of the document

 கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்களுக்கு ஊதியம்


கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்களுக்கு ஊதியம் வழங்கும் பொருட்டு ரூ.40.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: கரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள ஏழை, எளியவா்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு வாழ்வாதாரத்துக்காக ரூ.1,000 அளிக்க வேண்டும் என்று கடந்த மே 31-ஆம் தேதியன்று முதல்வா் அறிவித்தாா்.

இதன்படி, மாதம் ஒன்றுக்கு சுமாா் 60 ஆயிரம் போ தனிமைப்படுத்தப்படுகின்றனா். எனவே இதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசை வருவாய் நிா்வாக ஆணையா் கோரியுள்ளாா். மேலும், கரோனாவால் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளவா்களின் வீடுகளுக்குச் சென்று சேவையாற்றுவதற்காக 10 வீடுகளுக்கு ஒருவா் என்ற வீதத்தில் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில் 67 ஆயிரத்து 200 வீடுகளுக்கு 14 நாட்களுக்கு 6,720 போ தேவைப்படுகிறாா்கள்.

அவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 என்ற வீதத்தில் 4 மாதங்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். எனவே அதற்கு ரூ.40.32 கோடி ஒதுக்கப்பட வேண்டும். மேலும் திருவாரூா் மாவட்டத்தில் வட்டார மருத்துவ அதிகாரிகளுக்கு உதவி செய்ய சுய உதவிக் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் அவா்களுக்கு ஊதியமாக ரூ.1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளாா். அவா் கேட்டுக்கொண்டபடி இந்தத் தொகைகளை ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post