Title of the document
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்திரவின்படி 15.06.2020 முதல் 10 - ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது 1 அறைக்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதால். ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் கூடுதல் தேர்வு அறைகள் ஏற்படுத்தப்படவேண்டிய நிலை உருவாகி உள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி 1 தேர்வு அறையில் 10 மாணவர்களுக்கு தேவையான பெஞ்ச் / டெஸ்க்குகள் உள்ளனவா என்ற விவரத்தையும் , கூடுதல் தேவைக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்வது குறித்த விவரத்தினையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 2- EXCEL Sheet- ல் தயார் செய்து பள்ளிக் கல்வி இயக்குநரின் மின் அஞ்சலுக்கு 29.5.20 க்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment