விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து எந்த ஆசிரியர்கள் விலக்கு பெறலாம்? - CEO உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, COVID 19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு அனைத்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் நலன் கருதி மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அரசு தேர்வுத்துறையின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த ஒரு ஆசிரியரும் விடுபடாமல் 27.05.2020 (27.05.2020 அன்று CE/SO மற்றும் 28.05.2020 அன்று AEs) முதல் நடைபெறவுள்ள விடைத்தாள் திருத்தும் பணிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பொருட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் இருப்பிட வசதிக்கேற்ப, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விடைத்தாள் திருத்தும் மையத்தில் (ஒரு பாடத்திற்கு ஐந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது) பணியினை மேற்கொள்ள ஏதுவாக ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பினை Click செய்து நாளை (20.05.2020) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட விவரத்தை அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் ( மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மூலமாக தெரிவித்து விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ள ஏதுவாக 26.05.2020க்குள் தலைமையிடத்தில் இருப்பதை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் உறுதிசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். COVID 19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள்/ இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்/தீவிர ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் தலைமையாசிரியர்கள் உறுதி செய்துகொண்டு, தலைமையாசிரியர்களின் முழு பொறுப்பில் விலக்களிக்கலாம்.

Post a comment

0 Comments