தேர்வு எழுதும் மாணவர் வீடுகளுக்கு பஸ் வசதி

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்கு, பஸ் வசதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச், 24ல் நடந்த, பிளஸ் 2 பாடத்துக்கான தேர்வில் மட்டும், ஊரடங்கு காரணமாக, 37 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை; அவர்களுக்கு, ஜூன், 4ம் தேதி தேர்வு நடக்கிறது. அதேபோல், பிளஸ் 1ல், ஒவ்வொரு பிரிவு மாணவருக்கும், ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு, ஜூன், 2ல் நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கு, ஜூன் 1 முதல், 12 வரை, அனைத்து பாடத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகளுக்கு, மாணவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், அரசின் சார்பில், இலவச பஸ் வசதி செய்யப்பட உள்ளது.

இதற்காக, தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், &'தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும். அவர்களின் வீட்டு முகவரிகளை சேகரித்து, அவர்களுக்கான தேர்வு மையத்துக்கு சென்று திரும்ப, பஸ் வசதி செய்யப்பட வேண்டும். &'அதற்கான வழித்தடங்களை தயாரித்து, கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்&' என, கூறப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments