யூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வு இதற்கு எப்படித் தயாராவது?

Join Our KalviNews Telegram Group - Click Here
பி.எஸ்சி., தகுதியைப் பெற்றுள்ளேன். சமீப காலத்தில் நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வு இது என்பதால் உங்களுக்கான காலம் மிகக் குறைவு என்பதை அறியுங்கள். பாங்க் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை பின்வருமாறு பிரிக்கலாம்.
* உங்களது படிப்பு தொடர்பான கேள்விகள். அதாவது பி.எஸ்சி., படிப்பில் உங்களுக்குப் பிடித்த பாடம் எது? அதிலிருந்து கேள்விகள் இடம் பெறலாம்.

* நீங்கள் நுழைய விரும்பும் துறையான வங்கித் துறையின் அடிப்படைகள் குறித்த கேள்விகள். உதாரணமாக பாங்க் ரேட் என்றால் என்ன, தற்போதைய சி.ஆர்.ஆர்., என்ன, பணவீக்க விகிதம் என்ன, பணவீக்கத்தின் போது மத்திய வங்கி செயல்படுத்தும் நடவடிக்கைகள் என்ன, தனியார் வங்கித் துறை அவசியமா இல்லையா, இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திடுவது யார் போன்ற கேள்விகள். பி.காம்., பாங்கிங் மேனேஜ்மென்ட் படித்தவரிடம் இதில் அதிகக் கேள்விகள் இடம் பெறலாம்.
* நடப்புச் செய்திகள் மற்றும் பொது அறிவுக் கேள்விகள். படிக்கும் செய்தித் தாள் என்ன, எதற்காக அதைப் படிக்கிறீர்கள், என்ன பகுதிகளைப் படிக்கிறீர்கள், நேர்முகத் தேர்வு நாளன்று என்ன முக்கியச் செய்திகள் போன்ற கேள்விகள் இதில் இடம் பெறலாம்.
* இந்தியா/தமிழ்நாடு/உங்களது சொந்த ஊர் தொடர்பான கேள்விகள், சுய அறிமுகம், குடும்பப் பின்னணி போன்ற கேள்விகள். இதில் கொஞ்சம் விபரமான கேள்விகளும் இடம் பெறலாம். உதாரணமாக நீங்கள் இந்தப் பணிக்கு எப்படிப் பொருத்தமானவர், உங்களது பலம்/பலவீனம் என்ன, இந்தப் பணி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், பொழுதுபோக்கு என்ன, ரோல் மாடல்யார் போன்ற தனிநபர் சம்பந்தமான கேள்விகள் இதில் இடம் பெறலாம்.
நேர்முகத் தேர்வு குறித்து ஏராளமான மாயைகள் உள்ளன. எனவே எதையும் நம்பாமல் கடுமையான முயற்சிகளோடு இதற்குத் தயாராகவும்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்