Title of the document
IMG_20200323_102239

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் தேதி மற்றும் தேர்வு முடிவுகள் தேதி அட்டவணையில், பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 12, 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையே மார்ச் 2 மற்றும் 4ம் தேதிகளில் துவங்கியது. இத்தேர்வுகள் முறையே மார்ச் 24 மற்றும் 26ம் தேதிகளில் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவலின் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பிளஸ் 2 கடைசி தேர்வில் பலர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அந்த தேர்வை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதுபோல் பிளஸ் 1 கடைசி தேர்வு மட்டும் நடத்தப்படவில்லை. இதனால் கடைசி தேர்வுகள் பிளஸ் 2க்கு ஜூன் 4ம் தேதியும், பிளஸ் 1க்கு ஜூன் 2ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. அதுபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதலே கல்வித்துறை தனது அறிவிப்பை பல்வேறு முரண்பாடுகளுடனேயே அறிவித்து வருகிறது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கு பின்பு வினாத்தாள் திருத்தும் பணிகளுக்காக, கல்வித்துறை இயக்குநரால் அறிவிப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் தேதிகள் மாற்றி அட்டவணை வெளியிடப்பட்டிருப்பதால் ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post