தமிழக அரசு செலவினங்களை குறைக்கும் வகையில் அதிரடி முடிவு - முழு விவரம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831 அரசு விழாக்களில் செலவுகளை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சால்வைகள், பூங்கொத்துகள் வழங்கும் செலவையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒவ்வொரு மாநிலங்களும் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றன. சில மாநிலங்கள் நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதுபோன்ற நடிவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிட்டுள்ளது. முழு விவரங்கள்;- * அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி இல்லை. * நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினத்தில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு. * அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும். * நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி. * மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை. * சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி. * மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி. * கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை. * விளம்பரச் செலவுகளை 25 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post a comment

0 Comments