Title of the document
அரசு, தனியார் ஊழியர்கள் 'ஆரோக்கிய சேது' செயலியை தங்கள்செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.

கரோனா வைரஸ் குறித்த விழிப் புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி 'ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்தது.

கடந்த 11-ம் தேதி மாநில முதல் வர்களுடன் கலந்துரையாடியபிரதமர் நரேந்திர மோடி, "ஆரோக் கிய சேது செயலியை போக்கு வரத்துக்கான மின்னணு அனுமதி சான்றாக (இ-பாஸ்) பயன்படுத் தலாம்" என்றார்.வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் ஊழியர் கள், ஆன்லைன் வர்த்தக நிறு வன ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கடந்த வாரம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அனைவரும் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது.மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், தனியார் ஊழியர் கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து செயல்பாட்டில் வைத்திருப் பது கட்டாயம் என்று அறிவித் துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தடை செய்யப் பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தேசிய, மாநில மருத்துவ உதவி மையங்களின் தொலைபேசி எண் கள் செயலியில் பட்டியலிடப்பட்டுள் ளன. மேலும் கரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு அருகில் நீங்கள் செல்லும்போது ஆரோக்கிய சேது செயலி எச்சரிக்கை விடுக்கும். இந்த எச்சரிக்கை வசதியை பெறு வதற்கு செல்போனில் புளுடூத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும் லொகேஷன் ஷேரிங்கை (location sharing), ஆல் வேஸில் (Always) வைத்திருக்க வேண்டும்.கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஆரோக்கிய சேது செயலி வெளியிடப்பட்டிருந் தாலும் அந்த செயலியை பயன் படுத்துவோரின் அந்தரங்க உரி மைக்கு பாதிப்பு ஏற்படலாம்என்று 'இன்டர்நெட் பிரீடம் பவுண்டேசன்' உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டின.

இதுகுறித்து மத்திய அரசின் 'MyGovIndia' தலைமை செயல் அதிகாரி அபிஷேக் சிங்வி கூறும்போது, "இதுவரை 5 கோடிக்கும் அதிக மானோர் ஆரோக்கிய சேது செயலி யை பதிவிறக்கம் செய்துள்ள னர். மருத்துவ அவசர நிலைக் காகவே இந்த செயலி பயன் படுத்தப்படுகிறது. பயனாளர்களின்தகவல்கள் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது" என்று உறுதி அளித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post