அறிவியல் உண்மை - வேகவைத்த அரிசிக்கு மட்டும் பசைத்தன்மை எவ்வாறு ஏற்படுகிறது?

Join Our KalviNews Telegram Group - Click Here
அரிசியில் அதிகளவு ஸ்டார்ச் என்ற மாவுப்பொருள் உள்ளது. இது நீரில் கரையக்கூடிய அமைலோஸ் என்ற மாவுப் பொருளாகவும் , நீரில் கரையாத அமைலோ பெக்டின் என்ற மாவுப்பொருளாகவும் இருக்கிறது. இவை குளுக்கோஸ் எனப்படும் பல ஆயிரக்கணக்கான ஒற்றைச் சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனவைதான். அரிசியை வேகவைக்கும்போது , இந்த மாவுப்பொருள்கள் நீரை உறிஞ்சி ' கனஅளவில் பெரிதாகின்றன. இதனால் ஸ்டார்ச் நெகிழ்வுத் தன்மை பெறுகிறது.

இந்த நிலையில் பருக்கைகளை எடுத்து நசுக்கிப் பார்த்தால் உள்ளே நெகிழ்வான மாவுப்பொருள் ஒட்டும் தன்மையோடு இருப்பதைக் காண்கிறோம்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்