3 இந்திய பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் விருது
வாஷிங்டன்:
மூன்று இந்திய பத்திரிகையாளர்கள புலிட்சர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில்
சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1917-ம் ஆண்டு முதல் புலிட்சர்
எனப்படும் உயரிய விருது வழங்கப்படுகிறது.
இதில் 2020 க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீரைச்
சேர்ந்த பத்திரிகையாளர்களான தர் யாசின், முக்தர்கான், சானி ஆனந்த் ஆகிய
மூவர் புலிட்சர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் ஏ.பி. உள்ளிட்ட முன்னணி பத்திரிகையில் புகைப்பட கலைஞர்கள் எனவும்
கடந்த ஆண்டு காஷ்மீரில் ஊரடங்கின் போது ஏற்பட்ட வன்முறை காட்சிகளை
வித்தியாச கோணத்தில் எடுத்த புகைப்படம் பாராட்டை பெற்றது. இதையடுத்து
அவர்கள் இந்த உயரிய விருதுக்கு தேர்வு பெற்றனர்.
Post a Comment