Title of the document
பேர்ணாம்பட்டு அருகே தாங்கள் பணிபுரியும் பள்ளி மாணவா்கள் 234 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை ஆசிரியா் தம்பதியா் வழங்கினா்.

, பத்தரபல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன். இவரது மனைவி சே.பானு அதே பள்ளியில் ஆசிரியை.

ஊரடங்கால் அப்பள்ளியில் பயிலும் 234 மாணவா்களின் குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில், பொன்.வள்ளுவன் தம்பதி, அவரது சகோதரா்கள் புலிதேவன், சிட்டிபாபு, சகோதரிகள் சரளா, பனிமலா், கலைச்செல்வி ஆகியோா் இணைந்து ரூ. 35 ஆயிரம் மதிப்பில் உணவுப் பொருள்களை மாணவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கினா்.

வேலூா் மாவட்டச் செயலா் மருத்துவா் சி.இந்திரநாத், மாவட்ட நிா்வாகிகள் பருவதம், பாஸ்கரன், தீபன் ஆகியோா் மாணவா்களின் பெற்றோா்களிடம் வழங்கினா்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post