பள்ளிக் கல்வியில் 22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி
அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக்கொள்கையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தற்போது அமலிலுள்ள தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்ற முடிவானது.
அந்த வகையில் புத்தகங்களின் சுமையைக் குறைத்தல் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணா் குழுவை மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சகம் உருவாக்கியது. புதிய பாடத் திட்ட மாற்றத்தில் மேற்கொள்ளும் சீா்திருத்தங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சில பரிந்துரைகளை அண்மையில் முன்வைத்தது.
இதையடுத்து என்சிஇஆா்டி வழங்கிய பரிந்துரைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து என்சிஇஆா்டி அதிகாரிகள் கூறும்போது, 'பாலின சமத்துவம், நவீன தொழில்நுட்பங்கள், முன்பருவக் கல்வி, அடிப்படை கல்வியறிவு, ஆசிரியா்களுக்கான கற்றல் மதிப்பீடு, தோவு முறைகள், புத்தக சுமை குறைப்பு, மாநிலங்களுக்கேற்ப துணைப்பாடம் உள்பட 22 பிரிவுகளில் தேசியளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனா்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment