Title of the document
சென்னை: 'சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில், இன்று(மே 24) வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.வங்கக் கடலில், ஒரு வாரத்துக்கு முன் உருவான, 'அம்பான்' புயலால், வானிலை மாற்றம் ஏற்பட்டு, தமிழக பகுதிகளில் வெப்ப அலை வீசியது. புயல் கரை கடந்த நிலையில், வானிலை மாற்றம், படிப்படியாக சீராகி வருகிறது. நேற்று முதல், வங்கக் கடல் பகுதிகளில் இருந்து, தமிழக நிலப்பரப்பை நோக்கி, ஈரப்பதம் மிக்க காற்று வீச துவங்கியுள்ளது.


நாளை இரவு முதல், வெப்பத்தின் தாக்கம் சற்று தணியலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இன்றைய நிலவரம் குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, கரூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய, 11 மாவட்டங்களில், இன்று, 40 முதல், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தும்.சென்னையை பொறுத்தவரை, வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சம், 40; குறைந்தபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


கடலோர மாவட்டங்களில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.ஆந்திராவின் கடலோர பகுதியை ஒட்டிய, தமிழக எல்லை பகுதிகளில் மட்டும், வெப்பக் காற்று வீசலாம். தென் மேற்கு அரபிக் கடலில், மணிக்கு, 55 கி.மீ., வேகம் வரை காற்று சுழலும் என்பதால், வரும், 27ம் தேதி வரை, மீனவர்கள், அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post