கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் வேறு வழியின்றி பொதுமுடக்கத்தில்
உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
இந்த நேரத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு நடத்தப்படாத பிளஸ் 1
மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சில பாடங்களுக்கான பொதுத் தேர்வை வரும் ஜூன்
1-ம் தேதி முதல் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
வெளியிட்டிருப்பது பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வை மேலும் ஒத்திவைக்கும்படியும், தேர்வை நடத்தாமல் மாற்று வழிகளில்
மாணவர்களுக்கு முடிவு வழங்கலாம் என்றும் இருவிதமாக கோரிக்கைகள்
முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி கேரளம், கோவா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட
மாநிலங்களும் சி.பி.எஸ்.இ. வாரியமும் இதுவரை நடத்தாமல் விட்ட பொதுத்
தேர்வுகளை நடத்துவதற்கான புதிய அட்டவணையை அறிவித்து இருக்கின்றன.
தேர்வுகளுக்கு மாணவர்களை அழைத்துவர கேரளமும் தமிழகமும் பேருந்து சேவைகளை
ஏற்பாடு செய்யும் பணியில்கூட இறங்கிவிட்டன.
Post a Comment