Title of the document
கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொது மக்கள் பெருமளவில் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.




How to reduce data consumption while using WhatsApp calls, videos and more
கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொது மக்கள் பெருமளவில் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் நண்பர்கள், குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க ஸ்மார்ட்போன்களை நாட வேண்டிய நிலை நிலவுகிறது.





வாட்ஸ்அப்
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் அதிக பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. இதை கொண்டு தரவுகளை பரிமாறி கொள்வது மட்டுமின்றி ஆடியோ, வீடியோ, வாய்ஸ் ஒவர் இண்டர்நெட் ப்ரோடோகால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இயக்க முடியும். எனினும் இவற்றுக்கு சீரான இணைய வேகம் அவசியம் ஆகும்.





இண்டர்நெட் பேண்ட்வித்
அத்தியாவசிய சேவைகளுக்கு சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில், இண்டர்நெட் பேண்ட்வித் பயன்பாட்டை குறைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 


எப்படி குறைக்க வேண்டும்
அந்த வகையில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் போது டேட்டா பயன்பாட்டை எப்படி குறைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது:





வாட்ஸ்அப் கால் டேட்டா பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகள்
1 - வாட்ஸ்அப் செயலியினுள் உள்ள மூன்று செங்குத்தான கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்
2 - செட்டிங்ஸ் ஆப்ஷனில் டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
3 - இனி லோ டேட்டா யூசேஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை லோ டேட்டா யூசேஜ் ஆப்ஷனில் காணலாம்
1 - வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்
2 - டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3 - மொபைல் டேட்டா பயன்பாட்டின் போது ஆப்ஷனில் அனைத்து ஆப்ஷன்களையும் அன்டிக் செய்து ஒகே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்
4 - இதே வழிமுறையினை வைபை மற்றும் ரோமிங் ஆப்ஷன்களிலும் செயல்படுத்த வேண்டும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post