பல குச்சிகளைச் சேர்த்துக்கட்டி சதுரம் போன்று வடிவமைத்து , அதன்மீது காகிதத்தை ஒட்டி , ஒரு பரப்பைத் தயாரிக்கிறோம். இதன் ஒரு மூலையில் வாலை இணைக்கிறோம். இதுவே காற்றாடி எனப்படுகிறது. இந்தப் பரப்பின்மீது சீராக காற்று வீசும்போது , ஒரு தள்ளுவிசை உண்டாகிறது.
இந்த விசையினால் காற்றாடி , காற்று வீசும் திசையில் பறந்து மேலே உயர்கிறது? காற்றாடியின் நடுவில் கட்டியுள்ள நூலை லாவகமாக சுண்டி காற்றாடியை மேலே உயர்த்தவும் கீழே இறக்கவும் முடிகிறது. காற்றாடியின் வால் , காற்றாடி நிலையாக பறக்க உதவுகிறது.
வால் இல்லையென்றால் , காற்றாடி நிலைகுலைந்து , அலைந்து முடிவில் கீழே விழுந்துவிடும். காற்று சீராக வீசாமல் புயல்போல சுழன்று வீசினாலும் காற்றாடி பறக்க இயலாது. கெட்டியான குச்சிகளால் அமைக்கப்பட்ட வடிவமோ , வாலோ இல்லாத ஒரு துண்டுக் காகிதம் காற்றில் அலையும். அதன் பரப்பானது விரிந்து காற்றுக்கு எதிராக நிலைக்க முடியாது. அதனால் காகித துண்டின் பரப்புமீது சீரான தள்ளுவிசை உண்டாகாது. மேலும் தள்ளுவிசையின் திசைக்கோணம் தொடர்ந்து மாறுவதால் துண்டுக் காகிதம் தொடர்ந்து அலைந்து முடிவில் கீழே விழுந்துவிடும்.
Post a Comment