SBI வாடிக்கையாளர்கள் உஷார். |
கொரோனா பாதிப்பால் நாடெங்கும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுனுள்ளேயே இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி போய் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் குறைந்தாலும், வீட்டிற்குள் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுகின்றன.
ஆன்லைனில் போலியான வணிகத்தளம், இ மெயில் போன்றவற்றை உருவாக்கி பலர் பணத்தை ஆட்டை போடுவதாக புகார் கூறப்படுகிறது. இது குறித்து மக்கள் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
அதில், தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபர்கள், வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் தொலைப்பேசி எண்ணிற்கு ஓடிபி எண் வரும் அதனை கூற வேண்டும் எனவும் கேட்பர். அதன்மூலம் ஈஎம்ஐ செலுத்துவதை ஒத்திவைக்க முடியும் என்றும் அந்நபர் கூறுவர். இது போன்று பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், ஓடிபி எண்ணை எந்த நபரிடமும் பகிர்வு செய்யக்கூடாது எனவும் எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment