Title of the document
ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் யுஜிசி அறிவிப்பு 
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. பள்ளி பொதுத்தேர்வு, கல்லூரிகளின் பருவத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. 
 இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும். கடைசி பருவத் தேர்வு ஜூலையில் நடத்தப்படும். முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு செப்டம்பரில் வகுப்புகள் தொடங்கப்படும். 
ஊரடங்கு காலத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் பயண விவரங்களை பல்கலைக்கழகங்கள் பதிவு செய்ய வேண்டும். வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகளை நடத்தலாம். எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். அவர்களின் வைவா தேர்வை காணொலி காட்சி மூலம் நடத்தலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post