Title of the document
சென்னை : 'ஊரடங்கு முடியும் வரை, 'அம்மா' உணவகங்களில், இலவசமாக உணவு வழங்கப்படும்' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது உள்ள சூழலில், பலருக்கு அம்மா உணவகங்கள் தான், மூன்று வேளை உணவை பூர்த்தி செய்கின்றன. ஆனால், வருமானம் இல்லாத பலர், மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் அம்மா உணவகங்களில் கூட, உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள, அம்மா உணவகங்களில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்து நிதி வழங்கினால், மக்களுக்கான உணவை இலவசமாக வழங்கலாம் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள, 407 அம்மா உணவகங்களில், பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க, பல்வேறு அமைப்புகள் முன்வந்து, மாநகராட்சிக்கு நிதி அளித்துள்ளன. அதன் அடிப்படையில், மாநகராட்சியில் உள்ள, அனைத்து அம்மா உணவகங்களிலும், மூன்று வேளையும், இலவசமாக உணவு வழங்கப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post