பெங்களூருவிலுள்ள பிஷப் காட்டன் விமன்ஸ் கிரிஸ்டியன் காலேஜ் என்பது
பெண்களுக்கென்றே இயங்கிடும் பிரத்யேக சட்டக் கல்லூரி ஆகும். இதில் 5 ஆண்டு
ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தரப்படுகிறது. +2ல் குறைந்தது 45 சதவீதத்துடன்
தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதே கல்லூரியில் 3
ஆண்டு எல்.எல்.பி., படிப்பும் நடத்தப்படுகிறது. பார் கவுன்சில் ஆப்
இந்தியாவின் அங்கீகாரம் பெற்றிருக்கும் இக் கல்லூரியை பெங்களூரு
பல்கலைக்கழகமும் கர்நாடகா மாநில அரசும் அங்கீகரித்துள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...