Title of the document
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 3 ஆயிரத்தும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி பிறப்பித்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் உத்தரவு நீட்டிக்க மத்திய அரசு ஆலோசிக்கு வருவதாக கூறப்படுகிறது.அமெரிக்காவில் பாஸ்டன் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி வரை அல்லது செப்டம்பர் இரண்டு வாரம் வரைநீட்டிக்கப்படலாம் எனத் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் ஜூன் மாதம் இறுதியில் தான் கரோனா பாதிப்புஉச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post