அரசுப் பள்ளி மாணவர்களின் வீடு தேடிச் சென்று ஆசிரியைகள் நிதியுதவி!

Join Our KalviNews Telegram Group - Click Here
அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு வீடு தேடிச் சென்று கொடுமுடி ஆசிரியைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியன் சிட்டப்புள்ளாப் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 33 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் உமாதேவி லீலாவதி என்ற இரண்டு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர் வேலையின்றி தவிப்பதை உணர்ந்த ஆசிரியைகள் இருவரும் அவர்களுக்கு உதவ முடிவு செய்தனர்.

20200424073431

இதையடுத்து மாணவர்களின் வீடுகளுக்கே சென்று தங்கள் சொந்த பணத்தில் தலா 1000 ரூபாய் என 33 பெற்றோருக்கும் வழங்கினர்.வரும் ஆண்டில் பள்ளியில் சேரவுள்ள மூன்று மாணவர்களின் பெற்றோருக்கும் தலா 1௦௦௦ ரூபாய் வழங்கியுள்ளனர். ஆசிரியைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்