Title of the document
தமிழகத்தில், ஊரடங்கு கடுமையாக்கப் பட்டுள்ளதால், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில், 121 பேருக்கு தொற்று உறுதியாகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2,058 ஆக உயர்ந்தபோதும், 32 மாவட்டங்களில், ஒருவருக்கு கூட, புதிதாக தொற்று பாதிப்பு இல்லை என்பது, மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
சென்னையில் மட்டும், கொரோனா பாதிப்பு, 'இறங்க மறுத்து' அடம் பிடித்து வருகிறது.இந்திய அளவிலும், 85 மாவட்டங்களில் புதிய தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், மக்கள் நிம்மதி அடையலாம்.தமிழகத்தில், நேற்று மட்டும், 7,093 பேருக்குக்கான, பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டது. அதில், பிறந்து ஐந்து நாட்களே ஆன, பெண் குழந்தை உட்பட, 121 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக சென்னையில், 103 பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை, 93 ஆயிரத்து, 189 நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பின், 2,058 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பு அறிகுறியுடன், 1,856 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சிகிச்சையில் இருந்தவர்களில், நேற்று மட்டும், 27 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து, இதுவரை, 1,128 பேர் வீடு திரும்பிஉள்ளனர்.


சென்னை 'அடம் '
சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 68 வயது நபர், உயிர் இழந்தார். அதன் வாயிலாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை, 25 ஆனது. சென்னை நகரின், 202 தெருக்களில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அதே நேரம், மற்ற மாவட்டங்களில், மகிழ்ச்சி தரும் செய்தியாக, கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. நேற்றைய கணக்கின்படி, 32 மாவட்டங்களில், புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதில், ஏழு மாவட்டங்களில், 10 நாட்களாக, எந்த தொற்றும் இல்லை.
சபாஷ் மாவட்டங்கள்
* நீலகிரி மாவட்டத்தில், 17 நாட்களாகவும், ராணிப்பேட்டையில், 15 நாட்களாகவும், கன்னியாகுமரியில், 14 நாட்களாகவும், புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை*ஈரோடில், 13 நாட்களாகவும், வேலுார், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில், 11 நாட்களாகவும், புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. நல்ல செய்தியாக, ஈரோடில் சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவருமே, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு விட்டனர்* 
கடலுாரில், ஒன்பது நாட்களாகவும்; துாத்துக்குடி, நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில், எட்டு நாட்களாகவும்; அரியலுாரில், ஆறு நாட்களாகவும், யாரும் பாதிக்கப்படவில்லை அ
ரியலுார், தர்மபுரி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், நீலகிரி ஆகிய மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் தான் பாதிப்புகள் உள்ளன.* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை பாதிப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 


எனவே, இந்த மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.* தஞ்சாவூரில் பாதிக்கப்பட்ட, 55 பேரில், 33 பேர் குணமடைந்துள்ளனர். ஐந்து நாளில், புதிதாக தொற்று ஏற்படவில்லை.
* கோவையில், 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 120 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்; 21 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். இங்கு, நான்கு நாட்களில், புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் தான், பாதிப்பு அதிகரித்து வருவதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில், பாதிப்பு பழைய நிலையிலேயே உள்ளது.
ஒட்டு மொத்தமாக


நாட்டின், 85 மாவட்டங்களில், ஏழு நாட்களாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதேபோல், 14 நாட்களில், 47 மாவட்டங்கள்; 21 நாட்களில், 39 மாவட்டங்கள்; 28 நாட்களில், 17 மாவட்டங்களில், யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக, தமிழகம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post