Title of the document
வலி என்பது விரும்பத்தகாத ஓர் எதிர்மறை உணர்ச்சி ஆகும். வலியை விரும்பவில்லை என்றாலும் உயிர்களுக்குமிகவும் அவசியமான , இருந்தே ஆக வேண்டிய பண்பு ஆகும். வலி என்பது மூளை ஏற்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் உடலின் ஓர் அறிவிப்பும் ஆகும். வலி மிகவும் அவசியமான தகவமைப்பு உணர்வே ஆகும். வாந்தி , காய்ச்சல் , இருமல் போன்று வலியும் ஓர் அறிகுறியே. நாம் ஓட்டும் சைக்கிளை சரியாக பராமரிக்கத் தவறினால் அதன் பகுதிப் பொருள் உராய்ந்து சிறு ஒலி ஏற்படுத்துமே அதுபோல் வலி என்பது உடல் உறுப்பு தன்னைக் கவனிக்க வேண்டுமென்று எழுப்பும் ஓசையே ஆகும்.

வலியை பொருட்படுத்தாவிட்டால் , வலியின் தன்மையும் , தீவிரமும் அதிகமாகி செயலியல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. புற்றுநோயின் ஆரம்ப காலத்தில் வலி எனும் அறிகுறி இல்லாமையால்தான் நோயின் தீவிரத் தன்மையை புறக்கணிக்கப்பட்டு , முற்றிய நிலையில் உண்டாகும் வலியால் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. வலியை உணர்வதற்கான உணர்ச்சி ஏற்பி , நரம்புமுனை , உணர் உறுப்புகள் அடித்தோல் , தசை , எலும்பு , ரத்தநாளங்கள் , உள்ளுறுப்புகள் ஆகியவற்றில் உள்ளன. இந்த உணர்ச்சி மையங்கள் , வலிக்கான உணர்வுத் தூண்டுதலைப் பெற்று புற எல்லை நரம்புகள் வழியாக மைய நரம்பு மண்டலத்திற்கு ( மூளை , தண்டுவடம் ) அந்த வலி உணர்வைக் கடத்தி வலியை உணர வைக்கின்றன. வலியின் தன்மையும் , பிரதிபலிப்பும் வெளிப்படுத்தும் பாங்கும் ஒருவரின் ( அல்லது ) உயிரின் சூழ்நிலை , மனநிலை , உடற்செயலியல் தன்மை பொறுத்து மாறுகின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post