Title of the document
கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.
*பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.
*விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.
*சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.
+தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.
+தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.
*அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post