Title of the document
இந்தக் காலத்தைப்போல் அந்தக் காலத்தில் வீடுகளை எப்போதும் பூட்டி வைத்திருக்க மாட்டார்கள். மெதுவாக நடந்து செல்லும் ஆமை வீட்டுக்குள் நுழைவதுகூடத் தெரியாமல் இருந்தால், அந்த வீட்டில் அந்நியர்கள்கூட நுழைந்துவிடலாம் அல்லவா! அதனால் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்லியிருக்கலாம். மற்றபடி ஆமைக்கும் கெட்ட சகுனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆமை ஒரு சாதுவான பிராணி. தற்போது பலரும் வீட்டில் செல்லப் பிராணியாகவும் வளர்த்துவருகிறார்கள். ஆமைகள் சுமார் 150 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடியவை என்பதால் சீனர்களும் அமெரிக்கப் பூர்வகுடி மக்களும் ஆமையை ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடையாளமாக நினைக்கிறார்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post