நாட்டு மக்களுக்கு பிரதமரின் 7 அறிவுரைகள்
நாட்டு மக்களுக்கு 7 அறிவுரைகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டு மக்கள் அனைவரும் பொறுமை, கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைப்பிடித்தால்
கரோனா வைரஸை தோற்கடிக்க முடியும். இதற்கு 7 அறிவுரைகளை முன்மொழிகிறேன்.
1. வீட்டில் முதியவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள். கரோனா வைரஸ் அவர்களை நெருங்காமல் பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள்.
2. ஊரடங்கு என்ற லட்சுமணன் கோட்டை யாரும் தாண்டக்கூடாது. சமூக விலகலை
அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட
முகக்கவசங்களை அணிய வேண்டும்.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். நன்கு காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும்.
4. ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் செல்போனில் பதிவிறக்கம் செய்ய
வேண்டும். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று பகுதிகளை அறிந்து கொள்ள முடியும்.
மற்றவர்களுக்கும் இந்த செயலியை அறிமுகம் செய்யலாம்.
5. ஏழை குடும்பங்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டுகிறேன். குறிப்பாக அவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய உதவுங்கள்.
6. உங்கள் நிறுவனம், ஆலைகளில் பணியாற்றுவோரிடம் கருணையுடன் செயல்படுங்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள்.
7. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்வரிசையில் போரிடும் மருத்துவர்கள்,
செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல் துறையினருக்கு மதிப்பு அளித்து
நடக்க வேண்டுகிறேன்.
நீங்கள் எங்கிருந்தாலும் அங்கேயே பாதுகாப்புடன் இருங்கள். வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்றுங்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்
Post a Comment