Title of the document

 
ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!




மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் என்எல்சி (NLC India Limited (NLCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என ஒட்டுமொத்த சேவையும் முடங்கியுள்ளது.




இதனிடையே, என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 259 காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு பி.இ பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17-05-2020 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக NLC நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 18 மார்ச் 2020

ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 17 மே 2020




தேர்வுகள் நடைபெறும் நாள்: 26, 27 மே 2020 (தேர்வு தேதி மாறுபடலாம்)

வயது வரம்பு:

1 மார்ச் 2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி - 33, எஸ்.சி, எஸ்டி - 35 வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எக்ஸிகியூடிவ் டிரெய்னியானது ஒரு வருட பயிற்சியாகும். இதில் அடிப்படையாக மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பிறகு, மாத சம்பளமா ரூ.60,000 ஆக உயர்த்தப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nlcindia.com அல்லது https://www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post