தமிழகத்தில் மே 4ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து சேவை

Join Our KalviNews Telegram Group - Click Here
தமிழகத்தில் மே 4ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 4ஆம் தேதி முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

அதில்

• அனைத்து பணியாளர்களுக்கு முகக் கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.

• மணிக்கு ஒருமுறை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

• பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.

• பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளி பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்