Title of the document
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை, அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்குவது குறித்து, பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.



இதுபற்றி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில், அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் வாயிலாக, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணியை துவங்க, தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொற்று பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, இப்பணி வழங்குவதையும்; அப்பகுதிகளில், விடைத்தாள் திருத்தும் மையம் துவங்குவதையும் நிறுத்தி வைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்றி, அமர்ந்திருக்க வேண்டும்;


வீட்டில் இருந்து, விடை திருத்தும் மையத்துக்கு வந்து செல்ல, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக, அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும், பின்னரும், சோப் அல்லது கிருமி நாசினியால், ஆசிரியர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதிகள், மையத்தில் செய்யப்பட வேண்டும். இவ்வாறு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post