Title of the document
IMG_20200424_144659

IMG_20200424_144831
IMG_20200424_144805

IMG_20200424_144735


அத்தியாவசியத் தேவைகளுக்காக காய்கறி கடைகள் / மளிகை கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தினசரி காலை 6 . 00 மணி முதல் மதியம் 1 . 00 மணி முடிய திறந்திருக்க அரசு அனுமதித்துள்ளது . நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த ஏதுவாக பொதுமக்களுக்கு மூன்று வகை வண்ண அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன . அதனடிப்படையில் பொதுமக்கள் அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளி வருகின்றனர் . கொரோனா நோய் பரவுதல் தடுப்பு நடவடிக்கைகளில் பொது மக்கள் வீட்டிலேயே இருத்தல் என்பது முக்கிய நடவடிக்கையாகும் .

எனவே , இப்பணியினை உறுதி செய்யவும் , பொது மக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தவும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு , காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் காவல் துறையினருக்கும் , கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள பிற அலுவலர்களுக்கும் உதவும் வகையில் நாமக்கல் நகராட்சி பகுதியில் இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்திரவிடப்படுகிறது .

இத்துடன் இணைப்பில் கண்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் 25 . 04 . 2020 காலை 6 . 00 மணிக்கு நாமக்கல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் . தினசரி காலை 6 . 00 மணி முதல் மதியம் 1 . 00 மணி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் .

நாமக்கல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளரால் ஒதுக்கப்படும் தெருக்களில் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து , உரிய பாதுகாப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post