Title of the document
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுகளை வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, தமிழகஅரசு, அரிசி கார்டுகளுக்கு, ரேஷனில், இன்று முதல், 1,000ரூபாய் மற்றும் பொருட்களை இலவசமாக வழங்க உள்ளது. இவற்றைவாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.




அதன்படி, www.tnpds.gov.in என்ற, இணையதளத்திற்கு சென்று, '1,000 ரூபாய் விட்டுக் கொடுக்க' என்று, ஒளிரும்பகுதியை, 'கிளிக்' செய்ய வேண்டும். அதில், மொபைல் போன் எண்ணை பதிவிட்டதும், எஸ்.எம்.எஸ்., தகவ-லில் வரும், ஒரு முறை ரகசிய எண்ணை குறிப்பிட வேண்டும். பின், கார்டுதாரரின் விபரங்கள் அடங்கிய பகுதி திறக்கும்.அதில், 'உரிமம் விட்டுக் கொடுத்தல்' தலைப்பை கிளிக் செய்து, 'புதிய கோரிக்கை' என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும்.




பின், உணவு தானியங்கள், 1,000 ரூபாய் அருகில் உள்ள கட்டங்களில் கிளிக் செய்து, இறுதியாக, 'சமர்ப்பிக்க' என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.இதேபோல், ‛tnepds' என்ற, மொபைல் போன் செயலி வாயிலாகவும், அவற்றில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா நிவாரணத்தை வாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post