Title of the document

தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை Sec 20 RTI Act


தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை
பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிவரும்
1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால்
4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும் வகையில் தகவலை தெரிந்தே   கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்
பிரிவு 20 (1) படி  நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம்
ரூ 25,000 உயர்த பட்ச அபராதம்
பிரிவு 20 (2) படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை
மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான் தண்டனை விதிக்க முடியும்
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீது தண்டனை விதிக்க இயலாது.

குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது

தண்டனைகள் (பிரிவு-20)

மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும்
தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம்
ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன்
மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும் ;
அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு
நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும்.
எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல்
அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை
மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும். 

மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு
பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு
ஆணையம் பரிந்துரை செய்யு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. https://www.facebook.com/groups/httpsrtionline.gov.in/permalink/1239193606756794/?mibextid=ZKlF025XJ6KyrSs8

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post