Title of the document
பள்ளிகளில், திறந்தவெளியில் சத்துணவு பரிமாறக்கூடாது' என, இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Tamil_News_large_2393773

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ -- மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சத்துணவு கூடங்கள் அமைக்கப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே, உணவு தயாரித்து வினியோகம் செய்யப்படுகிறது.பள்ளி மாணவர்களை, பள்ளி வளாகத்தில் திறந்தவெளியிலும், நடை பாதைகளிலும் அமரவைத்து, மதிய உணவு பரிமாறுவதாக, புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், பள்ளி வகுப்பறை கட்டடங்களில் வைத்து, உணவுபரிமாறும்படி, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறை கட்டடங்கள் அல்லது சேதம் அடைந்த வகுப்பறை கட்டடங்களை செப்பனிட்டு, அவற்றில் வைத்து மாணவர்களுக்கு சத்துணவு பரிமாற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post