Title of the document

 கொரோனா,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் பல கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.




மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலையில் எட்டாவா மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் குறித்த விபரத்தை தருமாறு அனைத்து கிராமப்பஞ்சாயத்துகளையும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் உடனடியாக பட்டியலிட்டு அரசுக்கு அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் அளிக்கும் பட்டியலின் அடிப்படையில் கரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதேபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post