Title of the document
காப்பதில் கவனஞ்செலுத்தாது
காப்பகத்தை தேடுது ஓர் கூட்டம்
உங்கள் உயிரூட்டம் என்பதை மறந்து எண்பதை தொட்டவுடன்
விட்டுவிட துடித்தால் வதங்கிய மறுகுழந்தைகளின் நெஞ்சமது வெடித்திடாதா?

தூளி கட்டி தோளில் இட்டு
பார்த்துப்பார்த்து பத்தியமிருந்த நித்திய தெய்வங்களை நிந்தித்தல் சரியா?
தாத்தா பாட்டிகள் உடனில்லாது ஓர் தலைமுறை வளராமோ குறையா?

ஒதுங்கிட குப்பைகளல்ல
ஒப்புயர்வற்ற மாணிக்கங்கள்

சுரணையும் ஈரமும் கொஞ்சமேனும் உங்கள் மனங்களில் இருக்குமெனில்
இடித்து தரைமட்டமாக்குங்கள் முதியோர் இல்லங்களை
நா தழுதழுக்க உங்களேயே எதிர்ப்பார்க்கும் அந்த வயோதிகப்பூக்களை மீட்டுச்சென்று மகிழ வையுங்கள் அந்த உள்ளங்களை

குருத்தோலை பழுக்க காலச்சக்கரம் வேகமாகவே உருளும்
அந்நிலையில் உங்களையும் சூழவே செய்திடும் தனிமை இருளும்...

சீனி.தனஞ்செழியன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم