Title of the document
 12TH EXAM

 இன்று நடந்த 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு கடினமாக உள்ளதால் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடந்த கணித பாட மற்றும் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கணித பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறையும் என பாட ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே தமிழ், ஆங்கில தேர்வுகள் முடிந்துவிட்டன. இந்த தேர்வுகள் எளிதாக இருந்த நிலையில் முக்கியப் பாடத் தேர்வுகள் இன்று முதல் துவங்கியுள்ளது. அந்த வகையில் இன்று நடந்த கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும் என கணித பாடத்திற்கான ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண்களில் கணிதம் இயற்பியல், வேதியியல் ஆகியவை முக்கியப் பாடங்களாக உள்ள நிலையில் இவற்றில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் குறைந்தால் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து கலை அறிவியல் பிரிவில் சேர மாணவர்களிடையே போட்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று நடந்த வணிகவியல் பாடமும் கடினம் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post