மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் தமிழக மாணவர்களும் வெற்றி பெறும் வகையில்,
என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்குமாறு
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு மாநில தகவல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், ரெயில்வே
தேர்வுகள், வங்கி, தபால் துறை போன்ற தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி
மொழிகளில் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுக்கான கேள்விகள் பெரும்பாலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன.எனவே தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று ஆவடியை சேர்ந்த ஆர்.சந்தர் என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர்மாதம் மனு அனுப்பினார்.
அதற்கு பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்தார். அவரும் பதில் அளிக்காததால், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகார் செய்தார்.இதை மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித்தார்.இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
விசாரணைக்குப்பின் தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மொழி பெயர்ப்பு துறையின் பணிகளில் புத்தகங்களையும் மொழி பெயர்க்க வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் தங்களின் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் தமிழில் படிப்பதால் அவர்களால் மேல்படிப்புகளுக்கு செல்வதிலும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதும்கடினமாக உள்ளது.
குறிப்பாக நீட், யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. ஆகிய தேர்வுகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுவதால் அந்த பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.ஆனால், தமிழ் வழியில் படித்த மாணவர்களால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை.
எனவே, தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய புத்தககங்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.இந்த மொழிபெயர்ப்புகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment