Title of the document

இந்த ஆப் உங்கள் தகவல்களை திருடலாம்! - எச்சரிக்கை விடும் கூகுள்



 டோட்டோக் ஆப் பயன்பாடு குறித்து கூகுள் ஸ்டோர் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.

 டோட்டோக் ToTok ஆப் என்பது சேட்டிங், ஆடியோ, விடியோ வாய்ஸ் கால் செய்ய பயன்படுகிறது.

இந்த செயலியானது   எஸ்.எம்.எஸ் செய்திகள், புகைப்படங்கள், ஆடியோ, மற்றும் கால் விவரங்கள் போன்ற  தனிப்பட்ட தகவல்களை உளவு பார்க்க முயற்சிக்கிறது. 




டோட்டோக் செயலி இதற்க்கு முன்பாக  ஒரு முறை இதே போல்  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. 

அந்த சமயத்தில், டோட்டோக் இணை நிறுவனர் பிரச்சனை சரிசெய்யபட்டுவிட்டது எனவே தங்களது செயலியை மீண்டும் கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில நிபந்தனைகளுடன் ஜனவரி மாத தொடக்கத்தில் டோட்டோக் செயலி மீண்டும் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த செயலியில் பயனர்கள் தகவல் ஏதேனும் திருப்பட்டுள்ளதா என்பது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கவனித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து வாட்ஸ்ஆப், ஸ்கைப், பேஸ்புக் விடியோ கால் வசதி துண்டிக்கப்பட்டதையடுத்து, டோடோக்  போன்ற செயலிகள் மாதாந்திர கட்டணத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Source

https://gulfnews.com/uae/google-play-store-warns-on-totok-this-app-tries-to-spy-on-you-1.1582183182577
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post