Title of the document
அரசுப்பள்ளி மாணவர்கள் நடித்த குறும்படம் 'விதிகளை மதி'! பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து, 'விதிகளை மதி' என்ற சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் தயாரித்துள்ளனர். 
  

 அதில் மாணவர்களே நடித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியை விண்ணரசி கூறியதாவது:பள்ளியில், என்.சி.சி., சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்டவற்றை போன்று, சாலைப் பாதுகாப்பு அமைப்பும் எங்கள் பள்ளியில் உள்ளது. சமூக அறிவியல் ஆசிரியை லுார்து ஆரோக்கிய அமலா, அந்த அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார்.அதன்படி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் தயாரிக்க திட்டமிட்டோம்.

மாணவர்கள் நடிக்க, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. நான்கு நிமிடங்கள் மட்டுமே ஓடும் அக்குறும்படத்தின் மூலம், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.வழக்கமாக, பேரணி, மற்றும் மனித சங்கிலி உள்ளிட்டவற்றின் மூலம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வந்ததால், அதை முன்னிட்டு, குறும்படத்தை தயாரித்து வெளியிட்டோம்.

இவ்வாறு அவர்கூறினார்.மாணவர்கள் தயாரித்த அக்குறும்படத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் வெளியிட்டார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பழனிசாமி, மற்றும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post