பள்ளிகல்வித் துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வில் வழங்கப்படும் ஆசிரியர் பணி விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
Amendments to the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service .


IMG_20200213_184258

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும் ' என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது . பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது . அதில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன . இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான மொத்த காலி பணிடங்களில் 2 சதவீ தந்தை கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .
அதேபோல தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை பிளஸ் 2 முடித்து தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால் இடைநிலை ஆசிரியர்க ளாக நியமிக்கப்பட்டனர் . இனி தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன் ' டெட் ' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது .

2% PG  ,BT ,20% Art master rule amendment - Download here ( Pdf Full Details )

Post a Comment

0 Comments