Title of the document
இந்தியாவில் தனி நபர் ஒருவர் சராசரியாக மாதம் எத்தனை ஜிபி டேட்டா பயன்படுத்துகிறார் தெரியுமா?

இந்தியாவில் சமீப காலமாக 4ஜி இணைய டேட்டா பயன்பாடு கடந்த ஆண்டைவிட 47 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இந்தியாவில் மொத்த டேட்டா பயன்பாட்டில் 96 சதவிகிதத்தினர் 4ஜி டேட்டா முறையைப் பின்பற்றுகின்றனர்.




இதனால் 3ஜி டேட்டா ட்ராஃபிக் 30 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாம். இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். இதனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற OTT தளங்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாம்.

இந்தியாவில் தனி நபர் சராசரியாக மாதம் 11 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறாராம். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் இந்தியர் ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 நிமிடங்களை செலவழிக்கிறாராம்.

இதனால் வீடியோ தரம் அதிகரிக்க இணைய வேகத்தையும் அதிகரிக்க வேண்டிய சூழல் டெலிகாம் துறைக்கு ஏற்பட்டுள்ளதாம்.மேலும், இந்தியாவில் VoLTE ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 432 மில்லியன் ஆக வளர்ந்துள்ளதாம்.


Do you know how many GB data a person consumes per month in India?


Recently, 4G internet data usage in India has increased by 47% over the past year. 96% of the total data usage in India follows the 4G data system. As a result, 3G data traffic is down 30 percent. The number of Internet users in India is increasing day by day. As a result, the number of OTT sites such as Netflix and Amazon Prime has increased to 30.

In India, the average person consumes 11 GB of data per month. Indians spend an average of 70 minutes per day on sites like Netflix, Amazon Prime, and Hotstar. The telecom industry has been forced to increase the speed of the internet to increase the video quality.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post