Title of the document
  தங்கம் விலை
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.33 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.




சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.752 உயா்ந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. அப்போது, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. 
போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் ஏறுமுகமாகவே இருந்தது. நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று(பிப்.24) மீண்டும் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.752 உயா்ந்து, ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.94 உயா்ந்து, ரூ.4,166-க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.53.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.53,300 ஆகவும் இருந்தது.




கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சா்வதேச பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கும் நிலை காணப்படுகிறது.

இதனால், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்று தங்கம் விலை உயர்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வர்த்தகர்கள் சம்மேளனத்தின் தமிழக தலைவா் ஜெயந்திலால் கூறியுள்ளார். 
திங்கள் கிழமை விலை நிலவரம் 
1 கிராம் தங்கம் ..................... 4,166 1 சவரன் தங்கம் ..................... 33,328 1 கிராம் வெள்ளி .................. 53.30 1 கிலோ வெள்ளி ................. 53,300 
சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,072 1 சவரன் தங்கம் ..................... 32,576 1 கிராம் வெள்ளி .................. 52.40 1 கிலோ வெள்ளி ................. 52,400
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post