Title of the document
images%252859%2529

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க, தனி தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்கள், இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 1ல், 'அரியர்' மற்றும் பிளஸ் 2 ஆகிய, இரண்டு தேர்வுகளுக்கும், ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டிய தனி தேர்வர்கள், கருத்தியல் தேர்வு நடக்கும் நாட்களுக்கு முன்பே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தின், முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, செய்முறை தேர்வு தேதியை தெரிந்து, அதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post