Title of the document
TRB முதலில் வெளியிட்ட முடிவுகளில், வேதியியல் ஆசிரியர்கள் தேர்வின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேல் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் மற்றும் இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய மெனு உருப்படி தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தினார்.


வேதியியல் பாடத்தில், பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன .


அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டார்.

நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் மற்ற பாடங்களுக்கு மட்டும் பணிநியமனத்தையே நடத்தி முடித்து விட்டது. மேல்முறையீடு செய்யாமலும் புதிய பட்டியலை வெளியிடாமலும் இக்கல்வி ஆண்டை கடந்து விட்டது. தேர்வு பட்டியலில் இடம்பெற்ற வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்த பணியையும் விட்டு விட்டதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக பணிநியமனத்திற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர்களின் வேண்டுகோளாகும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post