Title of the document
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும் பழைய நடைமுறையே தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 2020-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13 09 2019 அன்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசாணைகள் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பெறப்பட்டது. தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை தொகையை திருப்பித் தர வேண்டும் என்றும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் வசூலித்த தொகையை திருப்பித் தருவதுதான் ஆசிரியர்களின் கடமை ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பள்ளிகளில் இந்தியை விருப்பப்பாடமாக வேண்டும் என்ற ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்கள் இருக்கின்ற பாடத்தை சொல்லிக் கொடுத்தாலே போதும் என்றார். இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து முழு விவரம் வரவில்லை, வந்தால் அது குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post