Title of the document
file73gr1a0n3qqi8qwi8jp-1563864055
நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.
அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post