Title of the document
அரசு ஊழியர்களின் ஊதிய செலவுக்காக இந்த நிதியாண்டில் ரூ.64,208.55 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிப் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுத்திக்குள் வழங்கப்படும் என நம்புகிறோம்.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்

நெடுஞ்சாலை துறையில் சாலைப் பாதுகாப்பிற்காக தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் சாலை பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்

மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் கிராமர் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது
 குடிநீர் வழங்கல் ,சுகாதாரம் கல்வி ,உணவு ,பாதுகாப்பு, அணுகு சாலை கட்டமைப்பு, இடுகாடுகள் ,தெருவிளக்குகள் ,வீட்டுவசதி ,வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ,பாதுகாப்பு போன்றவற்றில் கிராம அளவில் தன்னிறைவு அடைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, உலகதரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகம் 12.21 கோடியில் அமைக்கப்படும்

காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post